தரைமட்டமாக்கப்பட்ட தன்னுடைய கன்வென்சன் அரங்கம் - நாகர்ஜுனாவின் விளக்கம்

By ·

நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கம் ஒன்று இடிக்கப்பட்ட சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் நாகர்ஜுனா. இவர் சினிமா தாண்டி சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூர் என்ற பகுதியில் தம்மிடி குந்தா என்ற ஏரி இருக்கிறது.

இந்த ஏரியை ஒட்டி இருக்கும் பகுதியில் ‘N Convention’ என்ற பெயரில் நடிகர் நாகர்ஜுனா அவர்கள் அரங்கம் ஒன்றை கட்டியிருந்தார். இந்த கட்டடத்தில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த கட்டடம் 10 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் மூன்று ஏக்கர் தம்மிடி குந்தா ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக நாகர்ஜுனா மீது அதிகாரிகள் புகார் கூறியிருந்தார்கள்.

நாகர்ஜுனா கட்டிடம் விவகாரம்:

மேலும், இந்த புகாரின் அடிப்படையில் நாகார்ஜுனா கட்டியிருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தை இடித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாகர்ஜுனா ட்விட்டர் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சட்டவிரோதமாக என்னுடைய N கன்வெக்சன் அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பது எனக்கு வேதனையை அளிக்கிறது.

நாகர்ஜுனா பதிவு:

நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கபடவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட சட்ட விரோத நோட்டீசுக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு போட்டது. தற்போது தவறான தகவலை மையமாக வைத்து என்னுடைய அரங்கம் இடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்து இருந்தால் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்து இருப்பேன்.

நாகர்ஜுனா குறித்த தகவல்:

தவறான இந்த நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணம் கூறப்படும் என்று கூறியிருக்கிறார். இப்படி நாகர்ஜுனா கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் நாகர்ஜுனா ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.

நாகர்ஜுனா திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவர் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவர் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக தனுஷும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை