விரைவில் இரண்டாம் திருமணம், முடிந்த நிச்சயதார்த்தம்- தனது வருங்கால மருமகளுடன் நாகர்ஜுனா போட்ட பதிவு

By Rajkumar · 8/8/2024

தனது வருங்கால மருமகளுடன் நாகர்ஜுனா போட்டிருக்கும் பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் நாகர்ஜுனா ஒருவர். இவரின் மகன் தான் நாக சைதன்யா. இவரும் தெலுங்குவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோஸ்' என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம்த்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக தனது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். பின் இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வளம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், 'ஊ சொல்றியா' என்ற பாடல் என்று பலரும் கூறியிருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:

இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கமோ கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இன்று, நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இன்று நிச்சயதார்த்தம்:

மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் நடிகர் நாக சைதன்யாவின் வீட்டில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அது மட்டும் இல்லாமல், இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்புவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தச் செய்தி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நாகர்ஜுனா பதிவு:

இந்நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் நடிகர் நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஜோடிக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு, நிச்சியதார்த்த புகைப்படங்களையும் நாகர்ஜுனா பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full