நான்கே நான்கு உடை, வெளிநாட்டில் 2 மாதங்களாக சிக்கியுள்ள சன் டிவி சீரியல் நடிகை.

By Rajkumar · 23/5/2020

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 28 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். சினிமா முதல் சின்னத்திரை என அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகை மௌனி ராய் அவர்கள் துபாயில் சிக்கி தவித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா லாக்டவுன் துவங்குவதற்க்கு முன்பே மார்ச் மாதத்தில் UAEக்கு சென்றுள்ளார் மௌனி ராய். அங்கு ஓரு மாத இதழிற்காக போட்டோ ஷூட் நடைபெறவிருந்தது. அங்கு 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்பதால் அதற்கு மட்டும் தாயராக சென்றிருக்கிறார். அது முடிந்ததும் அங்கேயே தனது சகோதரியுடன் துபாயில் தங்கினார். இந்தியாவில் முழுமையாக லாக்டவுன் போடப்பட்ட பிறகு அவரால் இங்கு திரும்ப இயலவில்லை. இது குறித்து மௌனி ராய் அவர்கள் பிரபல ஊடகங்கத்திடம் பேசி இருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பது, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது எனக்கு தெரியாது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பதற்கு இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் இருந்தால் தான் நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்பத்திடம் இருந்து பிரிந்து இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது. மும்பைக்கு திரும்பி வர மிக ஆவலாக காத்திருக்கிறேன். எப்போது நிலைமை சகஜ நிலைக்கு திரும்பும் என்று கூறினார். நாகினி சீரியல் மூலம் அதிகமாக பாப்புலர் ஆனவர் நடிகை மௌனி ராய். அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிட்டது.

டீவி பாக்காத இளைஞர்களை கூட இந்த சீரியல் பார்க்க வைத்தது. அந்த அளவுக்கு நாகினி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானது. நாகினி சீரியல் மூலம் நடிகை மௌனி ராய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். சீரியலுக்கு பிறகு இவர் பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோல்ட் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு கேஜிஎப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். அதற்கு பிறகு ரோமியோ அக்பர் வால்டர், மேட் இன் சைனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து மௌனி ராய் ப்ரம்மாஸ்த்ரா மற்றும் முகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full