நயினார் நாகேந்திரனின் சர்ச்சை கருத்து , கொந்தளித்து நடிகை த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி - பின்னணி இது தான்

By subhashini · 16/2/2026

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்து அரசியலில் களம் இறங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய அரசியல் வருகை பல கட்சிகளுக்கு பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இதனால் பல கட்சிகள் விஜயை விமர்சித்தும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=vv4cojwYwfE

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் மற்றும் திரிஷாவை தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி இருந்தார். குறிப்பாக விஜய், திரிஷாவிடம் இருந்து முழுவதுமாக வெளியே வரவேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் அரசியல் செய்ய வேண்டும் என்றெல்லாம் மோசமாக பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரன் பேட்டி:

இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் விவாத பொருளாக மாறியது. இதை அடுத்து நடிகை திரிஷா அவர்கள் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், மாநிலத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் இப்படி சர்ச்சைக்குரிய பொருத்தமில்லாத கருத்துக்களை சொல்வதை எதிர்பார்க்கவில்லை.
திரிஷா எந்த அரசியல் கட்சியுடன் இணைந்து இல்லை.

திரிஷா அறிக்கை:

எதிர்காலத்திலும் அந்த மாதிரி எந்த ஒரு திட்டமும் இல்லை. அவர் அரசியல் விஷயங்களில் எப்போதுமே நடுநிலை வகிக்க கூடியவர். அப்படி இருக்கும்போது அவர் பெயரை அரசியல் களத்தில் பயன்படுத்தக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பொது வெளியில் பேசக்கூடாது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். திரிஷாவுக்கு எந்த தொடர்பும் இல்லாத விஷயங்களில் அவருடைய பெயரை இழுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து பலருமே திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=gf5GFoT3Am4

நயினார் நாகேந்திரன் மன்னிப்பு:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், இதுவரை என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் பேசியது கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை நான் அனுமதிப்பதும் இல்லை. அன்றைய நாள் நான் தவறி வந்த ஒரு வார்த்தை. அதைப்பற்றி வானதி சீனிவாசனும், அண்ணாமலையும் என்னிடம் பேசினார்கள். உண்மையிலேயே இதனால் யாரேனும் வருத்தப்பட்டு இருந்தால் காயப்பட்டிருந்தால் மனப்பூர்வமாக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full