'குருவாயூர் அம்பலநடையில்' பட சர்ச்சை, நக்கலைட்ஸ் டீமின் ஆதங்கம்- இயக்குனர் ராஜேஷ்வர் அளித்த பேட்டி

By subhashini · 10/7/2024

பிரித்விராஜின் குருவாயூர் அம்பலநடையில் என்ற படத்திற்கு எழுந்திருக்கும் புது சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள மொழியில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிருத்திவிராஜ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குருவாயூர் அம்பலநடையில்.

இந்தப்படத்தில் பேசில் ஜோசப், நிகிலா விமல், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படம் குறித்த சர்ச்சை வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த படத்தினுடைய கதை இரண்டு ஆண்களுக்கு முன்பு நக்கலைட்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருந்த 'பாய் ஃப்ரெண்ட் அலப்பறைகள்' என்ற வீடியோவின் கன்டென்ட் போலவே இருக்கிறது என்று சோசியல் மீடியாவில் கூறப்பட்டு வருகிறது.

ராஜேஸ்வர் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக நக்கலைட்ஸின் கிரியேட்டிவ் ஹெட் ராஜேஸ்வர் என்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், குருவாயூர் அம்பலநடையில் படத்தினுடைய ட்ரெய்லர் வந்தபோது பாய் பிரண்ட் அலப்பறைகள் வீடியோ உடைய ஸ்கிரிப்ட் டைரக்டர், இயக்குனர் எல்லோருமே இது நம்முடைய கதை மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். அதுக்கு நான் படம் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். படம் வந்த பிறகு ரெண்டு கதையுமே ஒரே மாதிரி இருந்தது.

https://www.youtube.com/watch?v=nG6xEpmkExc

குருவாயூர் அம்பலநடையில் படம் குறித்து சொன்னது:

இதனால் அந்த படத்தினுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு மெசேஜும் அனுப்பி இருந்தோம். ஆனால், இன்றுவரை அவர்களிடம் இருந்து அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. தற்போது படம் ஓடிடியில் வந்தபோது மக்களுமே இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போ இதுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகணும். காரணம், எங்களுடைய பல வீடியோக்களை நாங்கள் படமாக பண்றதுக்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

பிரித்விராஜ் படம் குறித்து சொன்னது:

அதில் இந்த வீடியோவும் ஒன்று. இனி எங்களால் அதை படமாக எடுக்கவே முடியாது. இந்த ஐடியா முன்னாடியே அவங்களுக்கு தோன்றியிருந்து அந்த கதையை அவர்கள் பதிவு செய்திருந்தாலும் சரி இந்த பிரச்சனையை நக்கலைட்ஸ் டீம் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

பிரித்விராஜ் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த 'சலார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full