மறைந்த நடிகை சித்ராவின் மகளை பார்த்துளீர்களா ? விஜய் இருக்கும் ஏரியாவில் சித்ரா நடத்தி வந்த ஹோட்டல் இதான்.

By Rajkumar · 8/4/2022

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது அட்ரஸ் இல்லாமல் இருக்கின்றனர். 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. அந்த வகையில் 90ஸ் நடிகை சித்ராவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நடிகை சித்ரா 1965ஆம் ஆண்டு கேரளாவின் கொச்சியில் பிறந்தவர். இவர் 1975ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சேரன் பாண்டியன், சின்னவர், பொண்டாட்டி ராஜ்ஜியம், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர் காவலன் என பல தமிழ் படங்களில் நடித்தார்.இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற ஒரு பெயரும் உள்ளது. நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றதால் இவருக்கு இந்த பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் கூட இவர் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி இருந்தார்.

சித்ரா துவங்கிய ஹோட்டல் :

இந்த ஹோட்டலுக்கு சி.எஸ் சிக்கன் என பெயர் வைத்துள்ளார். கடை கல்லாவிலும் உட்கார்ந்து கொண்டு வீட்டையும் கவனித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார் சித்ரா. அவரது ஹோட்டலின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆடர் செய்தால் நம் வீடு தேடி உணவு வந்துவிடும். அதே போல சித்ரா தான் அந்த ஹோட்டலை கவனித்து வந்தார்.

சித்ராவின் திடீர் மரணம் :

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவரின் இந்த திடீர் மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகை சித்ராவின் மரண செய்தி கேட்ட பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்துவந்தனர். கடந்த மே 21 ஆம் தேதி தான் தன் பிறந்தநாளில் ரசிகர்கள் போன் செய்து வாழ்த்தியது குறித்து சந்தோசப்பட்டார்.

கணவரின் ஐஸ் பேக்டரி :

ஆனால், பிறந்தநாளை கொண்டாடிய இரண்டு மாதத்தில் அதாவது ஆகஸ்ட் 21ல் காலமாகினார் சித்ரா. சித்ரா இறந்த பின்னர் அந்த ஹோட்டலை அவரது குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். மேலும், சித்ராவின் கணவர் ஏற்கனவே ஐஸ் பேக்டரி ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடதக்கது

Tamil Behind Talkies AMP · Quick view
View full