தமிழ் சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் நமீதாவின் கணவர். எந்த சேனல்? என்ன தொடர்? வீடியோவை வெளியிட்ட நமீதா.

By Rajkumar · 25/12/2019

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா.. பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா.

https://www.instagram.com/p/B6U8SB1g0Vn/

பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று பல போராட்டங்கள் நமீதா அவர்கள் செய்து வந்தார். நடிகை நமீதா தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகை நமீதா அவர்கள் 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : காஜல் அகர்வால் ஆட்டம் போட்ட அதே நீச்சல் குளத்தில் பிகினி உடைகளில் போஸ்களை அள்ளி வீசிய லட்சுமி ராய்.

சமீபத்தில் இவர் சீரியலில் நடிக்கப் போகிறார் என்று தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இப்போது அது குறித்த ஒரு வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார் நடிகை நமீதா. அதில் அவர் நடிக்கிறாரா? இல்லையா? என்று வீடியோவை பார்த்து அனைவரும் தெரிந்து கொண்டார்கள். ஆமாங்க, நடிகை நமீதாவின் கணவரான வீரா சின்னத்திரையில் நாயகனாக அறிமுகமாகிறார். அந்த வீடியோவில் அவரது கணவர் வீரோ தான் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கலர்ஸ் தமிழ் டிவி-யில் விரையில் ஒளிபரப்பாக உள்ள ’உயிரே’ என்னும் தொடரில் நாயகனாக அறிமுகமாகிறார் வீரா.

ஜனவரி 2-ம் தேதி முதல் இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘சோட்டி சர்தானி’ என்ற தொடரின் கதையை தான் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் மிகவும் அழகான காதல் கதையாக ‘உயிரே’ இருக்கும் என நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த உயிரே தொடரை நடிகை ராதிகாவின் ‘ராடான் மீடியா’ தான் தயாரித்து வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதோடு சன் தொலைக்காட்சியைத் தவிர்த்து மற்றொரு தொலைகாட்சி சேனலுக்கு ராடான் மீடியா நெடுந்தொடர் தயாரித்து வழங்குவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full