கர்ப்பம் கலைந்ததால் மன உளைச்சல், கணவர் போட்ட கண்டிஷன்- மனம் திறந்த நடிகை நமீதா

By subhashini · 12/6/2024

கர்ப்பம் கலைந்ததால் தன்னுடைய கணவர் போட்ட கண்டிஷன் குறித்து முதன்முறையாக நடிகை நமிதா மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த கன்னியாக அண்ணா படத்தின் மூலம் தான் நமீதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார்.

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இளைஞர்களின் மனதில் தனக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பின் இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

நமீதா திருமணம்:

பின் உடல் எடை கொஞ்சம் அதிகரித்த பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.

நமீதா குடும்பம்:

பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நமீதா உருவாக்கி இருக்கிறாராம். தற்போது நமீதா அவர்கள் “பவ் பவ்” தற்போது படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நமீதாவிற்கும் அவருடைய கணவர் வீரேந்திர சௌத்திரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

நமீதா பேட்டி:

இதற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் நமீதா, நானும் என் கணவரும் பிரிந்து விவாகரத்து வாங்கினோம் என்றெல்லாம் செய்திகள் பரவி இருந்தது. இது முழுக்க முழுக்க பொய். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இருக்கிறோம். மேலும், என்னுடைய கர்ப்ப காலத்தில் நான் பல கஷ்டங்களை சந்தித்து இருந்தேன். என்னுடைய பெற்றோர் வீட்டில் இருக்கும் போதுதான் நான் கர்ப்பமாக இருந்தேன். என்னுடைய கணவர் வீரா அங்கே கிளம்பி வந்துவிட்டார். மூன்று மாதத்தில் எனக்கு இரட்டை குழந்தைகள் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

கணவர் போட்ட கண்டிஷன்:

அதுமட்டுமில்லாமல் இரட்டை குழந்தைகள் என்பதால் உடல் எடையை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். இதனால் நான் ரெஸ்டில் தான் இருந்தேன். நான் நடக்கவே கூடாது என்று என்னுடைய கணவர் வீரா பயங்கரமாக கண்டிஷன் எல்லாம் போட்டார். அதற்கு காரணம், எங்களுக்கு திருமணமாகி நான்கு மாதத்திலேயே நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால், அந்த கர்ப்பம் திடீரென்று கலைந்து விட்டது. அந்த சமயத்தில் நாங்கள் ரொம்பவே மன உளைச்சலில் இருந்தோம். அதற்கு பிறகுதான் எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full