நமீதாவின் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாள் - கியூட் புகைப்படம் வைரல்.

By subhashini · 4/7/2023

நடிகை நமீதா குழந்தைகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தான் நமீதா சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான சில படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பின் இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

நமீதா திருமணம்:

பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.

நமீதா குடும்பம்:

பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. மேலும், இவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா, மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு பலருமே நமீதாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து நமீதா தன்னுடைய குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவு செய்து வந்தார்.

நமீதா குழந்தைகளின் முதலாவது பிறந்தநாள்

இந்த நிலையில் நமீதா அவர்கள் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை கணவருடன் சேர்ந்து கேரளாவில் உள்ள கோயிலில் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். மேலும், இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எங்களுடைய வாழ்க்கை ஒளிமயமாகவும், பிரகாசமாகவும் இருப்பதற்கு என்னுடைய குழந்தைகள் தான் காரணம். என்னுடைய குழந்தைகளுக்கு இன்று முதலாவது பிறந்தநாள். கிருஷ்ணா ஆதித்யா மற்றும் தியான் ராஜ் இருவரும் ஒரு வயதை பூர்த்தி செய்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் குறித்து நமீதா சொன்னது:

மேலும், இவர்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் மந்திரங்களையும், அற்புதங்களையும் செய்து உள்ளார்கள். என்னுடைய இதயத் துடிப்பிற்கு இந்த குழந்தைகள் தான் காரணம். லவ் யூ கிருஷ்ணா,ஆதித்யா மற்றும் தியான் ராஜ் என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது நமிதாவின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே நமீதாவின் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full