தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர். இவர் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- பாண்டிராஜ் கூட்டணியில் நம்ம வீட்டு பிள்ளை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவெல் நடித்துள்ளார். மேலும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, சூரி ,சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்காக அணிருத் அவர்கள் “காந்த கண்ணழகி” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த நிலையில் இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் அண்ணன், தங்கை பாசத்தில் சிவாஜி கணேசன் ,சாவித்ரி அவர்களை மிஞ்சும் அளவிற்கு சிவகார்த்திகேயன்,ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பு இருந்தது என்று விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

கதைக்களம் :

அண்ணன், தங்கை பாசம்; கிராமத்து வாழ்க்கை; காதல்; உறவுகள் என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய கமர்சியல் படமாக “நம்ம வீட்டுப் பிள்ளை” வெளிவந்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நம்ம வீட்டுப் பிள்ளை ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் என்று கூட சொல்லலாம்.அண்ணன், தங்கை பாச கதைகளை எவ்வளவோ? படத்தில் பார்த்திருப்போம். அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் நம்ம வீட்டு பிள்ளை படம் இருக்கிறது. மேலும், பாண்டிராஜ் அவர்கள் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குடும்ப கதையை இயக்கி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தில் அப்பா இல்லாத மகனின் பாசத்தையும், தன் உடன் பிறக்காத தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தையும் சொல்லுகிற கதை தான்.

Advertisement

மேலும், ரசிகர்கள் அனைவரின் மனதையும் நெகிழவைக்கும் விதமாகவும், படம் முடிவதற்குள் அனைவரின் கண்களையும் குலம் ஆகும் அளவிற்கு கண்ணீரில் மூழ்கி விட்டார் பாண்டிராஜ் .சமுத்திரம் படத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசத்தை அட்ராசிட்டியாக சென்டிமென்ட்டை கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறு வயதிலேயே அப்பாவை இழந்து விட்டார்.மேலும், எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக போய் நிற்பார். ஆனால், அவருடைய சொந்த விஷயங்களுக்கு இவருக்கு கை கொடுக்காமல், எந்த ஒரு துளி அளவும் பக்க துணையாக இருக்காத உறவினர்கள் . சிவகார்த்திகேயன் தன்னுடைய தங்கையான ஐஸ்வர்யாவை எப்படியாவது ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஊர் முழுதும் அலைகிறார். ஆனால் ,அவரை யாருமே கட்டிக் கொள்ள முன்வருவதில்லை.

Advertisement

அப்போது தனது பகைவரான நட்டி என்பவர் சிவகார்த்திகேயன் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். இதனால்,தங்கைக்காக சிவகார்த்திகேயன் படும் துன்பங்களையும் கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு போராடுகிறார். இறுதியில் இருவருக்கும் நடக்கும் பாச போராட்டத்தில் என்ன? நடப்பது தான் மீதிக்கதை. பொதுவாக சிவகார்த்திகேயன் படம் என்றாலே லூட்டி பையனாக , அவரை சுற்றி வரும் பெண்கள் கூட்டம் என்று கலகலப்பாக இருக்கும் .அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கதையில் அடுத்தது என்ன நடக்கும் என்று யூகித்துக் கொள்ளும் அளவிற்கு திரைக்கதை இருந்தது. மேலும் பாண்டிராஜ் அவர்கள் முடிந்த வரை இன்றைய ட்ரெண்டை படத்தில் கொண்டுவந்துள்ளார். ரசிகர்கள் ரசிக்கும் படி படத்தை கொடுத்துள்ளார். அனு இமானுவேல் தன்னுடைய கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல அழகான கிராமத்து பகுதிகளை கண் குளிர வைக்கும் வகையில் கொண்டுவந்துள்ளார். சீமானின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்ல உள்ளது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது.

பிளஸ் :

படத்தின் நீளம், சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் படம் முழுவதும் போரடிக்காமல் கொண்டு செல்லும் அளவிற்கு இருந்தது.

குடும்ப கதை, கிராமத்து கதை, சென்டிமென்ட் கதை ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.
.
மைனஸ்:

அனுமான் இமானுவேல் கதாபாத்திரம் ஏதோ கட்டாயத்திற்காக வைத்தது போல் இருந்தது.

மேலும் படத்தில் உள்ள உறவுகள் யார் யார் என்று தெளிவாக கூறி இருந்தால் நன்றாக இருக்கும்

படத்தின் இரண்டாம் பகுதி அடுத்து என்ன என்று நமக்கே தெரியும் அளவிற்கு இருந்தது.

Advertisement