அதுக்கு பயந்து தான் தலைமறைவா இருக்காரு - நந்தினி சீரியல் ஹீரோ குறித்து மனைவியின் பரபரப்பு புகார்.

By subhashini · 12/12/2023

நந்தினி சீரியல் நடிகரை போலீசால் தீவிரமாக தேடி வரும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ராகுல் ரவி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன நந்தினி தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த முதல் தொடரிலேயே இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் சன் டிவியில் சாக்லேட் என்ற தொடரிலும் நடித்திருந்தார். அதற்குப் பின்பு கண்ணான கண்ணே என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதற்குப் பின் இவர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதாக சென்று விட்டார். அது மட்டும் இல்லாமல் இவர் செகண்ட் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

நடிகர் ராகுல் ரவி பதிவு:

இதனிடையே இவருக்கு திருமணம் ஆனது. இது தொடர்பாக நடிகர் ராகுல் ரவி 2017 ஆம் ஆண்டு பதிவில், கல்யாணம் ஆகாத நான் நந்தினி சீரியலில் கணவர், அப்பா ரோலில் நடித்தேன். ரொம்பவே சேலஞ்ஜாக இருந்தது. எதிர்காலத்தில் எனக்கு வரக்கூடிய மனைவியிடம் நல்ல புருஷனா எப்படி நடந்துக்கணும் என்பதெல்லாம் இந்த சீரியல் கத்துக் கொடுத்தது என்றாலும் கூறியிருந்தார். பின் மீண்டும் பதிவில் ராகுல், நான் அவளை முதன் முதலாக சந்தித்தபோது ஒரு சாதாரணமாக நாளாக தான் உணர்ந்தேன்.

ராகுல் ரவி திருமணம்:

அவளின் அழகான புன்னகையோடும் பேச்சுகளோடும் ஒவ்வொரு நாளுமே எனக்கு சிறப்பான நாளாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் வந்திருப்பவள் வெறும் பெண்ணல்ல என்பதை உணர்ந்தேன். அவள் தான் என்னுடைய உயிர். எங்களது பெரிய நாளுக்காக காத்திருக்கிறேன் என்று தன்னுடைய திருமணத்தை குறித்து கூறியிருந்தார். பிறகு 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய காதலி லட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் குறித்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

ராகுல் குடும்ப விவகாரம்:

இவர் காதலித்த பின் லட்சுமி டிசைனர். இவர்கள் திருமணம் ஆகி நன்றாக தான் இருந்தார்கள். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், ரில்ஸ் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. என்ன பிரச்சனை என்பது தெரிவதற்குள்ளேயே இருவருக்கும் மத்தியில் பெரிய கலவரமே நடந்து போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று சென்று விட்டார்கள். ராகுல் ரவி ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவர் மீது அவருடைய மனைவி லட்சுமி புகார் கொடுத்திருந்தார்.

தலைமறைவான ராகுல்:

அது மட்டும் இல்லாமல் கையும் களவுமாகவே லக்ஷ்மி ராகுலை பிடித்து இருக்கிறார். இது தொடர்பாக கேட்டதற்கு ராகுல் அவருடைய மனைவியை அடித்திருக்கிறார். இதனால் தான் ராகுல் மீது அவருடைய மனைவி எஃப் ஐ ஆர் போட்டிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் ராகுல் கேட்டிருக்கிறார். ஆனால், பெயில் கிடைக்கவில்லை. அதனால் ராகுல் தலைமறைவாகி இருக்கிறார். தற்போது ராகுலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கூடிய விரைவில் அவர் கைது செய்வார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full