வெளியே போறான்னு சொன்ன எல்லோரையும் அனுப்பிட்டாங்களா, ஆனா என்னை - நந்தினி ஆவேசம்

By subhashini · 6/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 92 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நுழைந்த சில தினங்களிலேயே வெளியேறியவர் நந்தினி.

பிக் பாஸ் 9:

பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி இல்லை என்று தன்னால் தொடர முடியாது என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தெல்லாம் வெளியேறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவே கிடையாது. கண்டன்டுக்காக இப்படி எல்லாம் ரொம்ப மோசமாக செய்றாங்க. சாப்பாடு கூட சரியா தருவதில்லை. விஜய் சேதுபதி எந்த போட்டியாளரையும் மதிப்பதில்லை. ஒரு விஷயத்தை சொல்ல வரும் போது அவமதிப்பாக நடந்து கொள்கிறார்.

நந்தினி பேட்டி:

உண்மையில் கமலஹாசன் இந்த மாதிரி கிடையாது. அவர் இருந்த வரைக்கும் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. விஜய் சேதுபதி வந்த பிறகு நிகழ்ச்சி நன்றாகவே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணனும். தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்ச்சியில் தாக்குகிறார்கள். வெளிய போறேன்னு சொல்றவங்க எல்லாரையும் வெளியே அனுப்பிட்டாங்களா? சாண்ட்ரா வெளியே போறேன்னு ரொம்பவே அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். பிரஜன் வெளியே போகும்போது அவர்கள் வெளியே போனும் என்று இருந்தார்கள்.

நிகழ்ச்சி பற்றிய விமர்சனம்:

அதே மாதிரி ரம்யா ஜோ வெளியே போறேன்னு விஜய் சேதுபதி இடமே சொன்னார். ஆனால் அவர்களை எல்லாம் வெளியே அனுப்பவில்லை. அப்ப என்ன மட்டும் எதுக்காக வெளியே அனுப்பினாங்க. ஒரு கன்ஃபெக்ஷன் இல்லாமல் என்னை வெளியே அனுப்பி விட்டார்கள். என்னை வெளியே அனுப்புனாங்களா? இல்ல எல்லோருமே சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி அனுப்புனார்களா? என்று எனக்கு தெரியணும். பிக் பாஸ் டீம் எனக்கு பதில் சொல்லி ஆகணும். மனித உரிமை மீறல் நடக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி எதிராக நீதிமன்றத்தில் நான் போராட இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full