ரஞ்சித் அண்ணா சொன்ன கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன் - நாங்குநேரி மாணவன் சின்னத்துரை

By subhashini · 8/5/2024

நாங்குநேரி மாணவர் சின்னதுரை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழில் செய்கிறார். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை சாதி வன்கொடுமை செய்து இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் அந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள்.

நாங்குநேரி சம்பவம்:

இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=eYXOVDND6mk

மாணவன் செய்த சாதனை:

சாதி வன்மத்தால் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து இருந்தது. மேலும், மாணவன் சின்னதுரை அவர்கள் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண் பெற்று இருக்கிறார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் மனம் தளராமல் படித்து மாணவர் சின்னதுரை சாதனை செய்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் மாணவர் சின்னதுரையின் உயர்கல்விக்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்பதாக அறிவித்திருக்கிறது.

சின்னதுரை அளித்த பேட்டி:

மேலும், முதல்வர் ஸ்டாலின் முதல் பிரபலங்கள் பலருமே சின்னதுரைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தை சின்னதுரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார். இது தொடர்பாக சின்னதுரை கூறி இருப்பது, முதல்வர் ஸ்டாலின், ரஞ்சித் அண்ணா எல்லோருமே நேரில் சந்தித்து வாழ்த்தியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பிளஸ்-2வில் நான் 550 மார்க் எடுப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி நடந்ததால் என்னால் 469 மார்க் தான் எடுக்க முடிந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் நான் படித்து மார்க் எடுக்க முடிந்ததற்கு காரணம் எல்லோரும் என்னை ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கை ஊட்டியதுதான்.

ரஞ்சித் குறித்து சொன்னது:

இந்த சம்பவம் எனக்கு நடக்கவில்லை என்றால் நான் இன்னமும் அதிகமாக மார்க் எடுத்து இருப்பேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எனக்கு புத்தகம், பேனா கொடுத்து உனக்கு எல்லா உதவியும் செய்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ரஞ்சித் அண்ணாவை சந்தித்தபோது, எல்லோரும் உனக்கு துணை இருக்கிறாங்க. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளு ஒரு அண்ணாவாக செய்ய வேண்டியது என்னுடைய கடமை. அதே மாதிரி உனக்கும் ஒரு கடமை இருக்கு, நீ படித்து முடித்து பெரியாளனதும் இந்த சமூகத்துக்காக கற்பிக்கணும் என்று சொல்லி 15 புத்தகங்களை கொடுத்து அனுப்பினார். நிச்சயமாக நான் நன்றாக படித்து இந்த சமூகத்துக்கு கற்பிக்கக் கூடிய நபராக மாறுவேன். மாணவர்கள் மத்தியில் சாதி என்ற எண்ணமே வராமல் ஒற்றுமையாக இருக்கணும். அது ரொம்ப முக்கியம் என்று பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full