'போதும் சார் போதும்' கமலின் கருத்துக்கு பதில் தெரிவித்த நேச்சுரல் ஸ்டார் நானி- பின்னணி இது தான்
கமல் பற்றி நடிகர் நானி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
நானி திரைப்பயணம்:
ஹிட் 3: இதைத் தொடர்ந்து நானி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நானி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஹிட்: நடிப்பில் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.
நானி பேட்டி:
இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் நானி அவர்கள் பல நிகழ்ச்சிகள், பேட்டிகளில் கமலஹாசன் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார். அப்படி ஒரு முறை அளித்த பேட்டியில் நானி, விருமாண்டி படத்தில் நீதிமன்ற காட்சியில் கமலஹாசன் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் நடிப்பை காண்பித்திருப்பார். அது என்னை ரொம்பவே வியக்க வைத்தது என்று பேசி இருந்தார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல், நானி என்னுடைய நடிப்பை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
Podhum sir. Podhum ♥️@ikamalhaasan
— Nani (@NameisNani) May 28, 2025
கமல் சொன்ன விஷயம்:
நான் நானியின் பெயரை குறிப்பிட்டதற்கு காரணம் அப்படித்தான் சினிமா இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி சொன்னதே போதும். அதுபோல்தான் நடிப்பிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இதைப் பார்த்த நடிகர் நானி தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், போதும் சார் போதும் என்ற ஹார்ட்டின் சிம்பிளுடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தக் லைஃப் படம்:
தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்து இருந்தது.