பொண்ணு வேறு யாரும் இல்ல - தன் வாருங்காள மனைவி குறித்து மனம் திறந்த நாஞ்சில் விஜயன்.

By Arun · 26/7/2023

திருமணம் குறித்து நாஞ்சில் விஜயின் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு என பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார்.

இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் இவர் சில குறும்படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கும் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவிக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து காரணமாக சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையில் சூர்யா தேவி அடி ஆட்களுடன் சென்று நாஞ்சில் விஜயனை கடுமையாக தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்தனர். பின் சூர்யா தேவி போலீசில் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் வனிதா உடன் நாஞ்சில் விஜயன் சேர்ந்து அவதூறாக பேசிவிட்டு இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டனர். இது குறித்துதான் நான் கேட்க சென்றிருந்தேன். ஆனால், அவர் தான் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என்று கூறவே நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தார்கள்.

.நாஞ்சில் விஜயன் வீட்டில் விசேஷம்:

பின் சிறையில் இருந்து வந்த பின்பு நாஞ்சில் விஜயன் பேட்டி கூட அளித்து இருந்தார். அதற்குப்பின் நாஞ்சில் விஜயன் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோவிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு சமிபத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நாஞ்சில் விஜயன் அளித்த பேட்டி:

இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து நாஞ்சில் விஜயன் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எங்களோடது சாதாரண குடும்பம் தான். டிவியில் வருமானம் எல்லாம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். அந்த ஒரு சூழலில் தம்பியின் வருமானத்திற்காக சென்னையில் ஒரு கடை வைத்துக் கொடுத்தேன். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். தங்கச்சி கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. இந்த இரண்டு கடமைகளும் தான் என் கண் முன்னாடி பெருசாக இருந்தது.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

திருமணம் குறித்து சொன்னது:

இந்த இரண்டு விஷயங்களுமே முடிந்து விட்டது. இதற்கு மேலேயும் சினிமாவில் பெரிய ஹீரோ ஆகிட்டு தான் கல்யாணம் செய்து செய்து கொள்ளணும்னு என்று இருந்தால் ஸ்ட்ரைட்டா 60-வது கல்யாணம் தான் பண்ணனும். அதனால் தான் இப்ப வீட்டில் சொன்ன அறிவுரைப்படி நண்பர்கள் மூலமாக அறிமுகமான பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தேன். வீட்டுக்கு ஒரு மருமகள் வந்தால் சினிமா வாய்ப்புகள் எல்லாம் தானாக வந்து விடப் போகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி எங்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறது என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full