ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பாபர் மசூதி குறித்து பேசி வீடியோ வெளியிட்ட நாஞ்சில் விஜயன்

By ·

பாபருக்கும் மசூதி கட்ட வேண்டும் என்று நாஞ்சில் விஜயன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பிரம்மாண்டமாக ராமர் கோவிலை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டு இருந்தார். அதன் படி பிரம்மாண்டமாக 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்:

இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

கோவில் குறித்த தகவல்:

இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் ராமரை தரிசித்து செல்கின்றார்கள். நேற்று ஹெலிகாப்டர் மூலம் ராமர் கோவிலின் மேல் மலர்கள் தூவப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்பட்டு வருகிறது.

நாஞ்சில் விஜயன் வீடியோ:

அதில் அவர், ராமர் கோயில் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. ஜெய் ஸ்ரீராம் முழக்கங்கள் தான் எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநிறுத்தம் ஒரு நாடாக இருக்கிறது. இங்கு அனைவரும் ஜாதி, மதம், பேதம் என்று பழகுகின்றார்கள். இஸ்லாமியர்கள் வீட்டில் ரம்ஜான் கொண்டாடும்போது இந்துக்கள் வீட்டுக்கு பிரியாணி செல்கின்றது.

பாபர் மசூதி குறித்து சொன்னது:

இந்துக்களின் அனைத்து பண்டிகையின் போதும் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு பலகாரங்கள் செல்கின்றது. இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் உறவினர்களாக பழகி வருகின்றார்கள். இந்த நிலையில் அயோத்திகள் ராமர் கோயில் கட்டப்பட்டது பெருமகிழ்ச்சி அளிக்கும் அதே நேரம் அங்கு பாபர் மசூதிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பிரம்மாண்டமாக ஒரு மசூதி கட்டினால் இன்னும் நன்றாக இருக்கும், ஜெய்ஹிந்த் என்று நாஞ்சில் விஜயன் பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full