தோல்விகள், புறக்கணிப்பு, அவமானங்கள் கடந்து கிடைத்த பொக்கிஷம் - நாஞ்சில் விஜயன் எமோஷனல்

By subhashini · 14/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். லேடிஸ் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருந்தார். அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன் நடித்திருந்தார்.
அதன் பின் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் திருமணம்:

மேலும், இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதிலும் இவர் சில குறும்படங்களில் கூட நடித்து இருந்தார். இதனிடையே நாஞ்சில் விஜயன், மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதை அடுத்து நாஞ்சில் விஜயன், தன் மனைவி மரியா கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

நாஞ்சில் விஜயன் குறித்த தகவல்:

அதன்பின் நாஞ்சில் விஜயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அதன் பின் நாஞ்சில் விஜயன் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நாஞ்சில் விஜயன் சொல்லியிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

நாஞ்சில் விஜயன் குட் நியூஸ்:

அதாவது பல போராட்டங்களுக்கு பிறகு நாஞ்சில் விஜயன் புதிதாக வீட்டுமனை ஒன்றை வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்பட வீடியோக்களை நாஞ்சில் விஜயன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, எத்தனையோ தோல்விகள் புறக்கணிப்பு அவமானங்கள் அத்தனையும் கடந்து என்னுடைய தன்னம்பிக்கை விடாமல் முயற்சி கடின உழைப்பினால் இந்த பூமியில் எங்களுக்கு ஒரு இடத்தை வாங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலருமே நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full