ஏன் எனக்கு சொல்ல முடியல, நான் கீழ்ஜாதியா? சராமரியாக நாஞ்சில் விஜயன் கேள்வி

By subhashini · 18/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் நாடக கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதனால் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருந்தார்.

அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன் நடித்திருந்தார். அதன் பின் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாக நாஞ்சில் விஜயன் பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியை விமர்சித்து நாஞ்சில் விஜயன் போட்டு இருக்கும் பதிவு தான் வைரலாகி வருகிறது. அதில், ஹலோ மிஸ்டர் விஜய் டிவி சமூக வலைதள அட்மின் நான் கடந்த 15 வருடமாக விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாருமே போட தயங்குக்கூடிய பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக போட்டு மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.

நாஞ்சில் விஜயன் பதிவு:

நம் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்தினை நம்முடைய விஜய் தொலைக்காட்சி சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட ஆனால் என்னுடைய பிறந்த நாளும் கடந்த வாரம் தான் நடந்தது ஆனால் எனக்கு ஒரு வாழ்த்து நீங்கள் கூறவில்லை அது ஏன் மறந்து விட்டீர்களா இல்லை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டீர்களா அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தார்கள் இப்பொழுது நீங்கள் செய்வதும் கிடடத்தட்ட அது போல் தான் இருக்கிறது.

விஜய் டிவி விமர்சனம்:

தொலைக்காட்சியில் உச்ச புகழ் பெற்றகலைஞர்களை உயர் ஜாதியாகவும் என்னை போல் ஒரு அங்கீகாரம் கிடைக்காத என போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் கீழ் ஜாதியாகவும் நீங்கள் பார்க்கிறீர்களோ என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வு விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம் ஏனென்றால் இப்படிப்பட்ட முடிவுகளை விஜய் டிவி சமூக வலைதளத்தை பார்க்க கூடிய அட்மின் தான் முடிவு செய்வார்கள் மற்ற அதிகாரிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு இதெல்லாம் ஒரு விஷயமா கடந்து போ நாஞ்சில் விஜயன் என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

சரத் சொன்னது:

இப்படித்தான் பல இடங்களில் நம் உரிமைகளை நாம் பெற மறுக்கிறோம். "நம் உரிமையை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும்' என்று கூறி இருக்கிறார். ஏற்கனேவே விஜய் டிவியில் வேலை சரத் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தனது சமூக வலைதளத்தில் மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று பதிவு ஒன்றை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் நாஞ்சில் விஜயனின் இந்த பதிவு விஜய் டிவியில் சீனியர் நபர்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லையா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full