நம்மை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு பதிலடி இது தான் - விஜய் டிவி நாஞ்சில் விஜயன் போட்ட திடீர் போஸ்ட்

By subhashini · 10/9/2025

விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நாஞ்சில் விஜயன். இவர் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திருநங்கை, கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜியன் என்னுடன் தான் தொடர்பில் இருந்தார். ஆனால், கொஞ்ச நாட்களாக அவர் என்னுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். அவர் என்னை மனதளவில் புண்படுத்தி இருக்கிறார். ஒரு திருநங்கையாக எனக்கு நியாயம் கிடைக்குமா? என்று கூட தெரியவில்லை.

நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கு மாத்திரை கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிச்சயம் நியாயம் வேண்டும். நாஞ்சில் விஜயனை 11 ஆண்டுகளாக எனக்கு தெரியும். ஐந்து ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். ஒரு பெண்ணாக இருந்திருந்தால் நான் கர்ப்பமாகி இருப்பேன். ஆனால், திருநங்கையான நான் எப்படி இதை நிரூபிக்க முடியும் என்று தெரியவில்லை. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் சொல்லி என்னிடம் பாலியல் ரீதியாக நாஞ்சில் விஜயன் தொடர்பு கொண்டார். மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

நாஞ்சில் விஜயன் மீது புகார்:

இப்போது நான் திருநங்கை என்பதால் தவிர்த்து விட்டார். இந்த சமூகம் என்னை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நாஞ்சில் விஜயன் கேட்கிறார். நான் திருநங்கை என்பது நாங்கள் பழகும் போது அவருக்கு தெரியாதா?
இதைப் பற்றி தொடர்பு கொண்டு அவரிடம் பேசலாம் என நினைத்தாலும் அவர் என்னை தவிர்க்கிறார். எல்லா சோசியல் மீடியாக்களிலும் என்னை பிளாக் செய்துவிட்டார். திருமணத்திற்கு முன்பிருந்தே என்னுடன் பழகி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் அவர் என்னை தவிர்த்து விட்டார். அவருக்கு குழந்தை வேண்டும் என்று சொன்னதால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சரி என்றேன்.

https://www.youtube.com/watch?v=AjuKeguCNUk

திருநங்கை அளித்த பேட்டி:

ஒரு திருநங்கையாக இருக்கும் எனக்கு வாழ்க்கை கொடுப்பதாக சொன்னார். அதனால் நானும் அவரை நம்பினேன். என்னை பற்றி நாஞ்சில் விஜயன் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். குழந்தை இருக்கு இதற்கு மேல் உன்னுடன் பழக முடியாது என்றெல்லாம் சொல்லிவிட்டார். இது என்னை மனதளவில் ரொம்பவே பாதித்துவிட்டது. என்று நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து இருந்தார்..
இந்நிலையில் இது தொடர்பாக நாஞ்சில் விஜயன், மாதம் பட்டி ரங்கராஜ் போல் பேசி வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாய் பொண்டாட்டி என்ற பண்ற, மிஸ் யூ, லவ் யூ.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

நாஞ்சில் விஜயன் பதிவு:

ஷூட்டிங் வந்துட்டேன் மேக்கப் போட்டேன். ஷூட்டுக்கு போறேன். யார் எது சொன்னாலும் நம்பாதே.
என்றைக்கும் உனக்கு நான், எனக்கு நீதான். பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ என்று பேசி இருக்கிறார். உடனே அங்கு போலீஸ் கெட்டப்பில் வந்த ஒருவரை பார்த்து நாஞ்சில் விஜயன் பயந்து, சார் நான் எதுவும் பண்ணவில்லை என்கிறார். அப்போது பக்கத்தில் இருப்பவர், யோவ் போலீஸ் கெட்டப்பில் நடிக்க வந்திருக்கிறார் என்று சொல்கிறார். அதோடு அந்த பதிவில், நம்மை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் நம்முடைய சிரிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full