நெப்போலியன் மகனின் அவதூறு வீடியோ - போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை - என்ன தெரியுமா?

By subhashini · 23/4/2025

நெப்போலியன் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் எடுத்து இருக்கும் அதிரடி நடவடிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்னர், இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். நடிப்பில் பிசியாக இருந்தாலும், நெப்போலியன் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதற்கிடையில் இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள். நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து, மகனின் சிகிச்சைக்காக தன் தாய் நாட்டையே விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அத்துடன் அங்கு புதிய ஐடி நிறுவனம் தொடங்கி, தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

நெப்போலியன் குறித்த தகவல்:

மேலும், பத்து வயதிற்குள் தனது மகன் தனுஷ் இறந்து விடுவார் என மருத்துவர்கள் சொன்னதை பொய்யாக்கி, அவருக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். பின் கடந்த ஆண்டு இவர் தன் மகன் தனுஷுக்கு உறவுக்கார பெண் அக்ஷ்யா என்பவரை திருமணம் வைத்தார். இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டு இருந்தார்கள். இத்திருமணத்தில் கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார், மீனா, பாண்டியராஜன், யூடியூபர் இர்ஃபான் என பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். மேலும், தனுஷ்-அக்ஷ்யா திருமணம் கோலாகலமாய் தமிழர்களின் கலாச்சாரப்படி நடந்தது.

நெப்போலியன் மகன் மீது அவதூறு:

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நெப்போலியன் மகன் தனுஷினுடைய உடல்நிலை பற்றியும் தனுஷின் மனைவி அக்ஷயா பற்றியும் சோசியல் மீடியாவில் அவதூறான செய்திகளை பரப்பிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, ஒன்றுமே செய்ய முடியாத ஒருவனுக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைப்பதா? என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இதற்கு தனுஷ் மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட பலருமே பேட்டிகளின் மூலம் பதிலடிம் கொடுத்திருக்கிறார்கள். இருந்துமே தனுஷுடைய உடல்நிலை பற்றி சோசியல் மீடியாவில் வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=2RlRirLDBV8

புகார் அளித்த காரணம்:

மேலும், இதற்கு தனுஷிற்கு சிகிச்சை அளித்து வரும் இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா என்பவர் நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அதில், தனுஷினுடைய உடல்நிலை குறித்தும் அவருடைய மனைவி குறித்தும் சோசியல் மீடியாவில் தேவையில்லாத சர்ச்சைகளையும் பொய்யான வதந்திகளையும் பரப்பிக் கொண்டு வருகிறார்கள். அவதூறு பரப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷ் நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்தது சந்தோஷமாகத்தான் வாழ்கிறார். தயவுசெய்து பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படி செய்பவர்களின் மீது உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போலீஸ் நடவடிக்கை:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் காவல்துறையினருக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். அதன் பின் புகாரில் கொடுக்கப்பட்டிருந்த youtube பக்கங்களின் ஐடிக்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணையும் நடத்தி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்ட சேனல்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடுஅந்த வீடியோக்களையும் youtube இல் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீஸர் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதன்படி பல வீடியோக்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விசாரணையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full