மகேஷ் பாபுவின் தாய்,தந்தையர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நடிகையுடன் 4ஆம் திருமணத்தை அறிவித்த அவரின் அண்ணன்.

By Manikandan · 2/1/2023

தெலுங்கு சினிமா திரையில் பிரபல நடிகரான மறைந்த இயக்குனர் மற்றும் நடிகரான விஜய் நிர்மலாவின் மகன் நடிகர் நரேஷ் பாபு, இவர் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன். இவருக்கு தற்போது 60 வயதாகிறது ஏற்கனவே 3 குழந்தைகளும் உள்ளார். இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில் தெலுங்கு சிரியல் மற்றும் திரைப்பட நடிகையான பவித்ராவை முத்தம் கொடுக்கும் வீடியோயை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் நரேஷ் ஏற்கனவே 2 திருமணங்கள் ஆகி அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் இவர் மீண்டும் ரகுபதி என்பவரை 3 வதாக திருமணம் செய்து கொண்டனர். இவரையும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளார் நடிகர் நரேஷ். மேலும் ஒவ்வொரு மனைவிகளுக்கும் 1 குழந்தைகள் விதம் 3 குழந்தைகள் உள்ளனர். இப்படிபட்ட நிலையில் இவர் தெலுங்கு நடிகையான பவித்ராவுடன் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அங்குசென்ற மூன்றவது மனைவி ரம்யா நடிகர் நரேஷ் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி கதியுள்ளார், அதனால் அங்கி போலீஸ் வந்ததை அடுத்து ரம்யா நரேஷை செருப்பால் அடிக்க சென்றுள்ளார் அப்போது அவரை போலீசார் தடுத்தனர். இதனையடுத்து ரமேஷ் ரம்யாவை பார்த்து விசில் அடித்துக்கொண்டே கிண்டலடித்தபடி சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நரேஷுடன் பழகி வரும் நடிகை பாவித்ரா தமிழ் சினிமாவில் வெளியாகிய கெளரவம், அயோக்கியா, வீட்டுல விஷேசம், பெ ரண்சிங்கம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதோடு பல திரைப்படங்களில் கதாயனாகிகளுக்கு அம்மாவாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனனே இரண்டு திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். இந்த இலையில் இவரும் நடிகர் நரேஷும் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று சோசியல் மீடியாவில் கிசு கிசுக்கள் பரவின.

இந்த நிலையில் நேற்று புதுவருட பிறப்பின் போது நடிகர் நரேஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இவரும் நடிகை பவித்ராவும் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து புதிய வருடம், புதிய ஆரம்பம், புதிய வாழ்க்கை என்றும் உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதமும் தேவை என்று பதிவில் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகவே நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை போட்டு இருவரையும் கலாய்த்து வருகின்றனர். நரேஷ்ஷின் தம்பியான மகேஷ் பாபுவின் தாய் தந்தை இருவரும் கடந்த ஆண்டு தான் காலமாகி இருந்தனர். இப்படி பெற்றோர்கள் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இந்த வயதில் 4ஆம் திருமணம் குறித்து அறிவித்து இருக்கும் நரேஷை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full