விஜய் அரசியலுக்கு வந்தா அவருக்கு தான் எங்கள் ஓட்டு - லியோ படத்தை பார்த்த பின் நரிக்குறவர்கள் உற்சாகம்.

By subhashini · 22/10/2023

விஜய்க்கு எங்கள் ஓட்டு கன்ஃபார்ம் என்று விசில் அடித்து லியோ படத்தை நரிக்குறவர் இன மக்கள் கொண்டாடியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும்.

இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.

லியோ படம்:

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=kBJbJApa5QA

லியோ வசூல்:

மேலும், உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் லியோ படத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின் இரண்டே நாளில் விஜயின் லியோ படம் 210 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் லியோ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரிக்குறவர்கள் கொண்டாட்டம்:

இந்த நிலையில் நரிக்குறவர்கள் லியோ படத்தை கொண்டாடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வடசென்னை பாரத் திரையரங்கில் காலை 9 மணிக்கு லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது நரிக்குறவர் இன மக்கள் லியோ படத்தை பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திரையரங்கம் நிர்வாகம் சார்பில் 14 டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=2_mSR6zK-ps

நரிக்குறவர்கள் அளித்த பேட்டி:

அதை வாங்கி அவர்கள் லியோ படத்தை திரையரங்கில் விசில் அடித்து கொண்டாடி இருக்கிறார்கள். பின் அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியது, விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தான் நாங்கள் வாக்களிப்போம். லியோ படம் சூப்பர். விஜய் மாஸ் செய்திருக்கிறார் என்றெல்லாம் சந்தோஷத்தில் கொண்டாடி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full