மூளை வளர்ச்சி இல்லைன்னு 8 மாத குழந்தையை விட்டு போயிட்டாள் - வேதனையில் நாசரின் தம்பி உருக்கம்
நடிகர் நாசரின் தம்பி குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக நாசர் திகழ்ந்து வருகிறார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து இருக்கிறார். இவர் இயக்குனர் இமயம் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். அதோடு இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டம் துவங்கி தற்போது வரை பல்வேறு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார் நாசர். தற்போது நாசர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், நடிகர் நாசருக்கு ஜவஹர் என்ற தம்பி ஒருவர் இருக்கிறார். இது பலருக்குமே தெரியாது.
நாசர் தம்பி குறித்த தகவல்:
பார்ப்பதற்கு அவர் அச்சு அசல் அண்ணன் நாசர் போலத்தான் இருப்பார். இவரும் ஒரு நடிகர் தான். இவர் பனிவிழும் மலர்வனம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இவர் ஹீரோவிற்கு அப்பாவாக தான் நடித்திருந்தார். அதன் பின் இவர் ஜிவி 2 என்ற படத்தில் காவல்துறையின் அதிகாரியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஜவஹர், நான் பிரான்சில் நன்றாக சம்பாதிக் கொண்டிருந்தேன்.
நாசர் தம்பி பேட்டி:
அப்போது என்னுடைய அம்மா வயதான காலத்தில் உனக்கு நிச்சயம் ஒரு துணை வேண்டும். நீ கல்யாணம் செய்து கொள் என்று சொன்னார். அதனால் நானுமே திருமணத்திற்கு சம்மதித்தேன். ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். நான் வசதியானவன், நாசரின் தம்பி என்பதற்காக தான் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். கல்யாணமான 15 நாட்களிலேயே அவர் கர்ப்பமானார். அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமே இல்லை. இருந்தாலும் பெற்றோர்கள் கொடுத்த அழுத்ததினால் தான் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள ஒத்துக் கொண்டார்.
கல்யாண வாழ்க்கை:
கல்யாணம் முடிந்த சில மாதத்திலேயே எனக்கும் அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் வந்தது. இதற்கிடையில் என்னுடைய மகன் பிறந்தான். என்னுடைய மகன் பிறந்த உடனே எங்களுக்கு பிரச்சனையும் அதிகமானது. நான் இங்கே இருந்ததால் பெரிதாக வருமானம் இல்லை என்று நான் பிரான்சுக்கு சென்று விட்டேன். நான் சென்ற உடனேயே என் மனைவியும் குழந்தையை விட்டு சென்று விட்டார். நான் 15 நாட்களிலேயே பிரான்சிலிருந்து திரும்பியும் வந்து விட்டேன். காரணம், அவனுக்கு அப்போது பல் கூட வளரவில்லை, நடக்கவும் இல்லை. என்னுடைய குழந்தையினுடைய தலை சரி வராமல் இருந்தது.
https://www.youtube.com/watch?v=_g5ejF5AdYM
மகன் குறித்து சொன்னது:
அதற்கு காரணம் அவர் குழந்தையை சரியான முறையில் பார்த்துக்கொள்ளவில்லை. அப்போது என்னுடைய குழந்தைக்கு எட்டு மாதம். எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் மூளை வளர்ச்சி இல்லாதவன். அவனை போன்று தான் என்னுடைய மகனும் இருக்கிறான் என்று சொல்லி என்னிடம் சண்டை போட்டு என் மனைவி சென்று விட்டார். அதற்கு பிறகு தான் நான் பிரான்சிலிருந்து வந்தேன். அப்போதிலிருந்து இப்போது வரை என் மகனை நான்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. என்னுடைய மகனுக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும் நான் தான் இருக்கிறேன். அவனுக்காக நான் தற்போது ஒரு வீடு ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.