தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், ரஜினி 168 படத்தில் இந்த ரோலில் தான் நடிக்கிறாரா ?

By Rajkumar · 24/12/2019

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தவுடன் சினிமாவில் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்தி கிளப்பி விட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படம் ரிலீஸ் செய்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் பக்கம் செல்ல மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் தலைவர் ரஜினிக்காந்த்தின் அடுத்த படத்திற்கான பூஜை நசமீபத்தில் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் வெளி பயங்கர குஷியில் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் பாருங்க : தெறி படத்தில் கைக் குழந்தையாக வந்த பாப்பாவா இது ? தற்போது எப்படி இருக்கார் பாருங்க.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று பல கேள்விகள் இணையங்களில் எழுந்தது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் இரண்டு மனைவிகள் என்ற செய்திகள் சில நாட்களுக்கு முன்பு தான் வெளி வந்து உள்ளது. இந்நிலையில் தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. ஆனால், தற்போது வந்து உள்ள செய்திகள் படி கீர்த்தி சுரேஷ் அவர்கள் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கிறார் என்றும் கூறுகிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை. நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் என்னவென்று படம் பார்த்த பிறகு தான் தெரியும் . மேலும், இந்த படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full