டேட்டிங் நகை, விலை உயர்ந்த பொருட்கள் - ஐஆர்எஸ் அதிகாரி வழக்கில் சிக்கிய சேரன் பட நடிகை நவ்யா நாயர்.

By Ajju · 30/8/2023

விசாரணையில் இருக்கும் வருவாய்த்துறை அதிகாரியுடன் நவ்யா நாயர் டேட்டிங் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாக இருப்பவர் நவ்யா நாயர். இவரின் உண்மையான பெயர் தன்யா வீணா. இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞரும் ஆவார்.

இவர் பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் திலீப் நடிப்பில் வெளிவந்த இஷ்டம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் மலையாளத்தில் நடித்து வந்தார். பின் இவர் தமிழில் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரன் நடிப்பில் வெளிவந்த ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும், இவருடைய சிறந்த நடிப்புக்காக கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கலைமாமணி விருதையும் வாங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சட்டவிரோத வழக்கில் சிக்கி உள்ள நபருடன் டேட்டிங் செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இந்திய வருவாய் அதிகாரியான இருந்தவர் சச்சின் சாவந்த். இவர் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடி 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருந்ததாக சிபிஐ இவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

நவ்யா நாயர் மீது விசாரணை:

இதனை அடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறை இடம் சென்றது. மேலும், சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் மாதம் சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரி சச்சின் சாவந்த்துடன் நடிகை நவ்யா நாயர் நெருங்கி பழகி இருந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சச்சின் சாவந்த் கிட்டதட்ட 10 முறைக்கு மேல் கொச்சினுக்கு சென்று நவ்யா நாயரை சந்தித்து இருக்கிறார்.

நவ்யா நாயர் கொடுத்த வாக்குமூலம்:

அவருக்கு நகை, விலை உயர்ந்த பொருட்களையும் பரிசாக கொடுத்திருக்கிறார். இது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அமலாக்க துறையினர் நவ்யா நாயர் இடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். அப்போது அவர், சச்சின் சாவந்த் எனக்கு நண்பர் மட்டும் தான். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் :

இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சச்சின் சாவந்த்ன் மற்றொரு பெண் நண்பரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். மேலும், சச்சின் சாவந்த்துக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full