'திருமணத்தில் திடீர் சந்திப்பு' தனுஷ் அமர்ந்த அதே வரிசையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நயன் - இதோ வீடியோ

By subhashini · 21/11/2024

ஆவணப்படம் சர்ச்சைக்கு பின் நயன்- தனுஷ் சந்தித்துக் கொண்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.

இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. மேலும், விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திருமண நிகழ்வு வீடியோ நவம்பர் 18ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நிறுவனமே கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விக்கி -நயன் திருமணம்:

இதற்காக நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ் இடம் அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை. இதை அடுத்து சமீபத்தில் இந்த ‘Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது. அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது.

நயன்தாரா அறிக்கை:

பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து நயன்தாரா- தனுஷ் விவகாரம் குறித்த செய்தி தான் பேசும் பொருளாகி இருக்கிறது.
இதை அடுத்து நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியிருந்தது.
இதில் நடிகை நயன்தாரா அவர்கள் சினிமாவில் இருந்து சில காலம் ஏன் விலகி இருந்தார்?அவருடைய காதல் வாழ்க்கை,சினிமா பயணம் குறித்து பல விஷயங்கள் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நயன்தாராவின் ஆவணப்பட வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தனுஷ் தந்தை விளக்கம்:

பின் ஆவணப்படம் வெளியானதை தொடர்ந்து நயன்தாரா அவர்கள் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தார். இதில் தனுஷ் பெயர் இல்லை. இதை அடுத்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேட்டியில் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திருமண விழா ஒன்றில் தனுஷ்- நயன்தாரா சந்தித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான dawn picturesஐ சேர்ந்தவர் தான் ஆகாஷ்.

View this post on Instagram

A post shared by nayanthara (@nayan_fanclub_thara)

சர்ச்சைக்கு பின் தனுஷ்-நயன்:

இவருக்கு தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் நயன்- தனுஷ் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரே வரிசையில் தான் நயன் - தனுஷ் அமர்ந்திருந்தார்கள். கால் மேல் கால் போட்டு நயன்தாரா உட்காந்து இருந்தார். இருவரும் சந்தித்து பேசி கொண்டார்களா? என்று தெரியவில்லை. மேலும், இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் கலந்துகொண்டு இருந்தார். நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி இருவரும் ஒன்றாகவே தான் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full