தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடித்து வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படமும். தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியானதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய வந்தது. இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியாகியது.

வசூலில் முன்னிலை :

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்கு பிறகு மீதும் நடிகர் அஜித் மற்றும் எச் வினோத் இயக்கத்தில் AK-61 துணிவு திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்கள் வேட்டை போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றிப்படங்களாக இருந்தது. திரைப்படம் வெளியான போதிலிருந்தே கொண்டாட்டங்கள் நடக்க தொடங்கி விட்டன மேலும் முதல் நாள் வசூலில் துணிவு படம் தமிழ் நாட்டில் முதல் இடத்தில் இருந்தது. மேலும் வரும் நாட்கள் விடுமுறை என்பதினால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement

அஜித்தின் ரசிகை நயன்தாரா :

இந்த நிலையில் தான் அஜித்துடைய தீவிர ரசிகையாக நடிகை நயன்தாராவின் புகைப்படம் ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தொடக்கத்தில் இருந்தே தீவிர அஜித் ரசிகை, மேலும் அஜித் நடித்த பல திரைப்படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் பில்லா ரீமேக் திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தார், இப்படத்தில் அஜித்துடன் கதாநாயகியாக நடித்திருந்தார் நயன்தாரா. 2007ஆம் ஆண்டு வெளியான பில்லா படம் பிளாக் பாஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அதற்கு பிறகு நடித்த ஆரம்பம், விஸ்வாசம், ஏகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக அஜித்துடன் நடித்திருந்தார்.

துணிவு படத்தை பார்த்த நயன்தாரா :

மேலும் துணிவு படத்தில் கூட இவர் நடிப்பதாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தான் துணிவு படத்தில் மஞ்சு வாரியார் நடித்திருந்தார், துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு விஜய் நடித்த வாரிசு படத்துடன் ஒன்றாக வெளியானது. பல பிரபலங்கள் துணிவு படத்தை பார்த்து கருத்து கூறிய நிலையில் இன்று நயன்தாரா துணிவு படத்தை பார்த்துள்ளார், அவர் துணிவு ஓடு திரையரங்கில் இருந்து வெளியில் வரும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

AK-62 அப்டேட் :

இந்த நிலையில் துணிவு படத்திற்க்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் இணைந்து அஜித்தின் AK-62 படத்தை எடுக்க உள்ளனர். இந்த படத்தில் முழு கதையையும் அஜித் கேட்டுவிட்டு படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் எனவும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தில் திரிஷா நடிக்க இருந்தது, ஆனால் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக துணிவு படத்தில் திரிஷாவுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை தேடி வருவதாக கூறப்டுகிறது.

Advertisement
Advertisement