நிஜமா ரொம்ப நாள் கழிச்சி டூர் போய் இருக்கோம்னு - விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.
https://www.instagram.com/p/CFFLdXSBfzE/
இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.
சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. அனால், தற்போதும் இவர்கள் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர்.சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடட தனது காதலருடன் தனி விமானத்தில் சென்று இருந்தார் நயன்.
இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார்கள். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுற்றுல்லா சென்று இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.