திடீரென்று விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா ? மருத்துவமனையில் அனுமதி ? என்ன ஆச்சு ?

By Rajkumar · 10/8/2022

திடீரென்று வாந்தி எடுத்த நயன்தாரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் பெற்று கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பின் விக்கி-நயன்:

இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

நயன்-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ :

தற்போது நயன்தாரா அவர்கள் மும்முரமாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த வீடியோவின் கிளம்பிஸ் எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

திடீரென வாந்தி எடுத்த நயன்:

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் திடீரென வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது, விக்னேஷ் சிவன் சமைத்த உணவை நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு சரியில்லாத காரணத்தினால் தான் அவர் வாந்தி எடுத்து இருக்கிறார். இதனை அடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாராவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். பின் மருத்துவமனையில் நயன்தாராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த பிறகு சில மணி நேரங்களிலேயே டிஸ்சார்ஜ் செய்து நயன்தாராவை வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல் உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full