கோவில் வாசலில் நயன்தாராவின் காலில் விழுந்த ரசிகை - நயன் செய்த அட்வைஸ். வைரலாகும் வீடியோ இதோ.

By Ajju · 28/6/2022

தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

இதையும் பாருங்க : படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன் - மேடையில் அவரே சொன்ன காரணம் ?

பிரம்மாண்டமாக நடந்த திருமணம் :

கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள்.

திருப்பதியில் சர்ச்சையில் சிக்கிய நயன் :

அங்கு இவர்கள் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் திருமணம் முடிந்து பின் இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்கள். அப்போது விக்னேஷ் சிவனும்-நயனும், இதுவரை எங்களுக்கு எப்படி ஆதரவு கொடுத்து வந்தீர்களோ, அதேபோல் இனியும் கொடுக்க வேண்டும்.

தாய்லாந்தில் ஹனி மூன் :

உங்களது வாழ்த்தும், ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் ஹனிமூன் எங்கே என்று கேள்வி எழுப்பி இருந்தார்? அதற்கு இரண்டு பேருமே பதில் ஏதும் கூறாமல் சிரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். பின்னர் இந்த ஜோடி ஹனி மூனுக்காக தாய்லாந்து பறந்தது. அங்கே எடுத்த பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=CON4npQDCiA

காலில் விழுந்த ரசிகை :

நயன்தாரா கிரிஸ்துவர் என்றாலும் விக்னேஷ் சிவனை காதலித்த பின்னர் இந்து முறையை தான் கடைபிடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் திருமணம் முடிந்த பின் விக்னேஷ் - சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கொச்சியில் உள்ள கோவில் ஒன்றில் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த போது ரசிகர்கள் பலர் நயன்தாராவுடன் போட்டோ எடுத்தனர். அப்போது ரசிகை ஒருவர் நயன்தாரா காலில் விழுந்தார். இதை எதிர்பாரத நயன் 'பிளீஸ் நானும் மனுஷி தான் இப்படி எல்லாம் பண்ணாதீர்கள் ' என்று அந்த ரசிகைக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full