கொரோனாவால் நின்ற அண்ணாத்த படப்பிடிப்பு - காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன். வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 25/12/2020

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. அனால், தற்போதும் இவர்கள் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர்.தற்பொழுது நடிகை நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைட்ரபாத்தில் நடந்துகொண்டிருந்தது. குழுவில் 8 பேருக்கு காரோண தோற்று இருந்ததால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக நயன்தாரா ஹைட்ரபாத்தில் இருந்தபோது விக்னேஷ் சிவனும் அங்குதான் இருந்ததார். இவர்கள் ஹைட்ரபாத்தில் இருந்து சென்னைக்கு ஒன்றாக வந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸ் கொண்டாட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full