கியூட்டாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன், வைரலாகும் புகைப்படம்

By subhashini · 14/2/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்- சீரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நயன்தாரா அவர்கள் தமிழில் மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய், கன்னடத்தில் யாஷ் உடன் டாக்சிக், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் மற்றும் மோகன்லால் மம்முட்டியுடன் சேர்ந்து பேட்ரியாட் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

நயன்தரா குடும்பம்:

இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகை தாய் மூலம் தான் இந்த குழந்தையை பெற்று எடுத்து இருந்தார்கள். குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

நயன்-விக்கி குறித்த தகவல்:

அதேபோல் விக்னேஷ் சிவன் பிரபலமான இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியாகவும் இருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற பேண்டஸி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படி நயன்தாரா- விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

காதலர் தின ஸ்பெசல்:

இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ், நயன்தாரா ஜோடியாக கொண்டாடி இருக்கிறார்கள். காதலர் தினத்திற்கு ஸ்பெஷல் ஆக இருவரும் ரொமான்டிக் போட்டோ சூட் ஒன்றையும் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full