'Touch பண்ணாத' - தனது படத்தை பார்க்க வந்த இடத்தில் கடுப்பான நயன். பின் அவரே கேட்ட மன்னிப்பு.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த கனக்ட் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இப்படி ஒரு நிலையில் தற்போது நயன்தாரா, அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்த படத்தில் செலிபிரிட்டி ஷோவை பார்க்க நயன் சென்று இருந்தார். அப்போது நயனின் உதவியாளர்கள் சிலர் புகைப்பட கலைஞர்களை வழிவிடு சொல்லி நகர்த்தியதில் ஒரு புகைப்பட கலைஞர் கால் இடறி கீழே விழுந்தார். பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்ட நயன் 'எதுவுமே பண்ணாதீங்க, டச் பண்ணாதீங்க' என்று கோபமாக கூறினார்.
நயன்தாரா இப்படி கோபப்படுவது முதன் முறையல்ல கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் தங்களுடைய குலதெய்வ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சாமி கும்பிட்டும் கொண்டிருக்கும் போது வெளியில் இருந்த சிலர் தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். பின் விக்னேஷ் சிவன் சில நிமிடங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டார்.
https://www.youtube.com/watch?v=0LeJGnHJPVU&t=74s
இதை கவனித்த நயன்தாரா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாதியில் வெளியில் வந்து உங்களுக்கு சாமி கும்பிடனுமா? வாங்க உள்ள வாங்க, சாமி கும்பிட தானே வந்திருக்ககோம். நாங்களும் தான் என்று கடுப்பாகி பேசிவிட்டு பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்றார். அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய புதிய பிஸ்னஸ் பொருட்களை அறிமுகம் செய்வதற்காக விழா ஒன்றிற்கும் சென்று இருந்தார் நயன்.
அதாவது சமீபத்தில் நயன்தாராவின் ஸ்கின் பிராண்டின் அறிமுக விழா மலேசியா கோலாலம்பூரில் நடந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாரா சென்ற போது அவரது ஆடையை தெரியாமல் ஒருவர்மிதித்து விட்டார் இதனால் உடனே சட்டென திரும்பி ஒரு முறை முறைத்தார் நயன்தாரா. இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இன்று இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/FridayCinemaOrg/status/1730523907810382204
அதே போல ஜீவாவுடன் நயன்தாரா நடித்த திருவிழா படத்தின் வீடியோ ஒன்று கூட வைரலானது. அந்த வீடியோவில் நயன்தாரா தன்னுடன் நடித்த பாட்டியிடம் டயலாக் ரியாக்சல் செய்து கொண்டிருப்பார். அப்போது பிராம்ட்டிங் கொடுப்பவர் நயன்தாரா பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றவருடைய வசனத்தை பேசி இருக்கிறார். இதனால் கோவமடைந்த நயன்தாரா நான் பேசும் போது எதுவும் பேசாதீர்கள். திருப்பி ஏன் பேசுகிறீர்கள். கவனம் செலுத்த விடுங்கள் என்று கோபமாக பேசி, அந்த இடத்தில் இருந்து சென்றிருப்பார்.