9 வருடத்திற்கு முன்பே இருந்துள்ள பனிப்போர், மேடையில் தனுஷிடம் மன்னிப்பு கேட்டுள்ள நயன்

By subhashini · 16/11/2024

தனுஷிடம் நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை 'Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள்.

நயன் திருமண வீடியோ:

மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ வருகிற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று netflix நிறுவனமே அறிவித்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் அம்ரித் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ். இவருடைய அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த 'Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது. அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

நயன் போஸ்ட்:

தற்போது இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகை நயன்தாராவும் தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய netflix ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .

தனுஷ் செய்த வேலை:

இப்படி இருக்கும் நிலையில் தனுஷ்- நயன்தாரா விவகாரம் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதாவது, 63 வருடத்திற்கு முன்பு ஃபிலிம் ஃபேர் விருது விழா நடந்தது. இதில் கோலிவுட் பிரபலங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பிரபலங்களுக்குமே விருது வழங்கப்பட்டிருந்தது. அப்போது சிறந்த தமிழ் படத்திற்கான விருது காக்கா முட்டைக்கு கிடைத்திருந்தது. இந்த படத்தினுடைய தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் தனுஷ் இதை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர், பட குழுவினரையும் பாராட்டி இருந்தார். அப்போது தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்திற்கும் சில விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

மன்னிப்பு கேட்ட நயன்:

அதற்குப் பின் நடிகை நயன்தாராவுக்கு நானும் ரவுடிதான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டது. விருதை வாங்கிய பிறகு நயன்தாரா, தனுசுக்கு மட்டும் சாரி சொல்லிவிட்டு நானும் ரவுடிதான் படத்தை பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை. ஒருவேளை என்னுடைய நடிப்பு தனுஷுக்கு பிடிக்கவில்லை போல என்று மேடையிலேயே தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார். பின் இந்த விருதை நானும் ரவுடிதான் படத்தின் உடைய இயக்குனருக்கும், என்னுடைய கணவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி பல வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full