பாலிவுட் சென்றாலே இப்படி தானா? விருது விழாவில் நயன்தாரா அணிந்து சென்ற உடையை பாருங்க

By Arun · 26/4/2024

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் வந்த நயன்தாராவின் வீடியோ வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். கடைசியாக நயன் நடித்த படம் அன்னபூரணி. இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது முதல் பாலிவுட் எண்ட்ரியாக அமைந்து இருந்த 'ஜவான்' திரைப்படம் வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டு இருந்தது. ஜவான் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விருது விழா ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார் நயன்.

https://www.youtube.com/shorts/R9YZ_UYqeMA

பொதுவாக தென்னிந்திய நடிகைகள் பலரும் பாலிவுட் சென்றாலே கவர்ச்சி புயலாக மாறிவிடுகின்றனர். என்னதான் நயன்தாரா ஆரம்பத்தில் பிகினி எல்லாம் போட்டு நடித்து இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்ததும் கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், தற்போது பாலிவுட் வாய்ப்பு வந்ததும் மீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார். ஆனால், தான் தயாரிக்கும் படங்களை மட்டும் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

https://twitter.com/wvmediaa/status/1783698311003754980

அதே போல விருது விழா என்றால் கலந்துகொள்கிறார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் தனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட செல்லாமல் இருக்கும் நயன்தாரா சென்று இருந்தார். இதனால் பலர் கேப்டன் இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா என்று நயன்தாராவை கடுமையாக விமரித்து வந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full