'நான் பொறந்ததுலே இருந்தே ரெடி' - வலியை பொறுத்துக்கொண்டு காது குத்திக்கொண்ட நயன்,

By subhashini · 25/9/2024

நடிகை நயன்தாராவின் காது குத்தி இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று இந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என்ன பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா திருமணம்:

இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்தது நாம் அறிந்ததே. மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா, நடித்து வருகிறார்.

நயன் குடும்பம்:

மேலும், நயன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு அடிக்கடி சுற்றுலா சென்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் முதலில் அழகு சாதன பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார்.

தொழிலதிபர் நயன்தாரா:

பின் கடந்த ஆண்டு '9ஸ்கின்',‘Femi 9’ என அடுத்தடுத்து பிசினஸ் செய்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் டிக்கெட் 9 என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த நிறுவனம் போட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா லேட்டஸ்ட் வீடியோ:

அதாவது, இவர் காது குத்தி இருக்கிறார். ஏற்கனவே காது குத்திய நிலையில் கூடுதலாக இரண்டு தோடுகளை காதின் மேல் பக்கத்தில் குத்தி போட்டு இருக்கிறார். அதைக் குத்தும் போது அவர்கள் ரெடியா என்று கேட்டதற்கு, நான் பிறந்ததிலிருந்து ரெடி என்று பஞ்ச் போட்டு ரத்தமாறே ரத்தமாறே என்ற விஜயின் மோட்டிவேஷனல் பாடலை காது குத்தும்போது பாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full