என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதற்கு நன்றி - தனது கணவரின் பிறந்தநாளில் நயன் போட்ட உருக்கமான பதிவு.

By Ajju · 18/9/2023

தனது கணவர் விக்கியின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சமீபத்தில் நயன்தாராவின் முதல் பாலிவுட் படமான 'ஜவான்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள்.

இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

நயன்தாரா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் தான் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை துவங்கினார். அதில் முதல் பதிவாக தனது இரண்டு மகன்களான உயிர் உலக்கை கையில் ஏந்தி நடந்து வரும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டு 'நான் வந்துட்டேன்னு சொல்லு' என்று கேப்ஷனையும் குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் நயன்தாரா. அதில் 'இந்த சிறப்பு நாளில் நான் உங்களைப் பற்றி நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களை மட்டும் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன். உங்களின் எல்லாவற்றிற்கும் நான் நன்றி உடையவராக இருக்கிறேன் உன்னை போல வேறு யாரும் இல்லை.

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

என் வாழ்க்கையில் ஒரு அழகிய கனவு போல வந்து அதை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியதற்கு நன்றி. நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சிறப்பானவர். என் உயிருக்கு வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக அமைய என்னுடைய உள்ளம் மற்றும் உயிரான வாழ்த்துகிறேன் நம்முடைய அனைத்து கனவுகளும் நலமாகட்டும் உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியையும் கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும். ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full