சினிமாவில் மட்டுமல்ல பிசினஸிலும் சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்த நயன் - குவியும் வாழ்த்துக்கள்.

By Manikandan · 12/12/2022

தமிழ் நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அறியப்படும் நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, அஜித், விஜய், சரத் குமார், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பிரபல நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவமும் பல வருடங்களாக காதலித்து வந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்படியிருக்கும் போது திருமணமாகி வெறும் 4 மதங்களிலேயே வாடகை தாயின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்கள் இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தமிழ்நாட்டு மருத்துவ அமைச்சர் வரை சென்றது. தற்போதுதான் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்த நயன்தாரா "கனெக்ட்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 22ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் இதற்க்கடுத்து ஹிந்தியில் ஜாவன், தமிழில் இறைவன், என்டி-81 போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

இப்படி சினிமாவில் கலக்கிவரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்து பல வணீக முதலீடுகளை செய்துள்ளனர். அதோடு பல நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் நயன்தாரா நடத்தி வரும் "தி லிப் பார்ம் கம்பெனியும் ஒன்றும். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா மற்றும் மருத்துவரான ரெனிட்டா ராஜன் என்ற இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் முழுக்க முழுக்க பெண்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் தொடங்கி ஒரு முதல் ஆண்டிலேயே நயன்தாரா மற்றும் ரெனிட்டா ராஜன் இணைத்து நடத்தி வரும் "தி லிப் பார்ம் கம்பெனி" நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. இப்படியிருக்கும் போது இந்த நிறுவனத்தின் முதல் ஆண்டின் வெற்றியை கொண்டாடும் வகையில் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிலில் நயன்தாரா கூறியதாவது `எங்களுடைய இந்த பயணத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றிய உங்களுக்கு எங்களுடைய நன்றிகள். இது உங்களுடைய ஆசிர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளின் மூலமே சாத்தியமானது. மேலும் எங்களுடைய இந்த வெற்றி பயணத்திற்கு எங்களுடன் பணியாற்றிய குழுவிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு அடியிலும் எங்களுக்கு ஆதரவளிக்கும் எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சமமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

மேலும் எங்களுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் சாதகமாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நன்றி. இந்த ஆதரவை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அதோடு சிறந்த தயாரிப்புகளை உங்களுக்கு வழங்க எங்களின் சிறந்த முயற்சிகளை செய்வோம் என்று உறுதியளிக்கிறோம் என்று அந்த பதிவில் கூறியிருந்தனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full