Audio Lanch போனாலே நடிகைளுக்கு இதான் நடக்கும்,அதான் நான் போறதே இல்ல - நயன் சொன்ன நியாயமான காரணம்.

By Rajkumar · 21/12/2022

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகைகளில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் நயன்தாரா தான் முதல் இடம்.

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார். நடிகையாக மட்டுமல்லாமல் நயந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். மேலும், லீட் ரோலில் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பில் தான் வெளியிடுகிறார் நயன். அதனாலேயே தன் சொந்த தயாரிப்பில் வெளியாகும் தன்னுடைய படங்களுக்கு முட்டும் Promtionல் கட்டாயம் ஈடுபட்டு விடுவார். இறுதியாக நயன்தாரா லீட் ரோலில் நடித்த நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனுக்காக டிடியுடன் ஒரு பேட்டியை அளித்து இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனுக்கு மட்டும் கலந்து கொள்ளும் நயன் அடுத்தவவர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை என்று கேள்விஎழுப்பினர், தன் படம் என்றால் ஒரு நியாயம் அடுத்தவர் தயாரித்தால் ஒரு ஞாயமா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நயன்தாரா தற்போது கனக்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் அவரே லீட் ரோலில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், வினய் போன்றவர்கள் முக்கிய ரோலில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய நயன்தாரா 'சினிமாவில் என்னுடைய இரண்டாம் பாதியில் எனக்கு சில கனவுகள் இருந்தது. அப்போது எல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எல்லாம் கிடையாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு காலகட்டமாக அது இருந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1605548248365641730

அப்போது ஏன் ஹீரோயின்களுக்கு மட்டும் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத போலவே இருக்கிறது என்று எனக்கு தோன்றி இருக்கிறது. ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றால் கூட எங்காவது ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக நம்மைப் பற்றி சொல்வார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஒரு முக்கியத்துவம் இருக்காது. அதனால் தான் நான் எந்த ஒரு பிரமோஷனுக்கும் போகாமல் இருக்க காரணம். அந்த இடத்திற்கு வந்த பின்னர் செல்லலாம் என்று நினைத்து அதன் பின்னர் நான் எந்த ஒரு பிரமோஷனுக்கும் செல்வதையே விட்டு விட்டேன்' என்று கூறியுள்ளார்.


behindtalkies AMP · Quick view
View full