தன் ஆவணப்படம் வெளிவந்த பின் நயன்தாரா வெளியிட்ட நன்றி அறிக்கை, லிஸ்டில் யார் யார் தெரியுமா?

By subhashini · 20/11/2024

தன்னுடைய ஆவணப்படம் வெளியானதை தொடர்ந்து நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை.

விக்கி -நயன் திருமணம்:

மேலும், விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திருமண நிகழ்வு வீடியோ நவம்பர் 18ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நிறுவனமே கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ் இடம் அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை.

தனுஷ் குறித்த சர்ச்சை:

இதை அடுத்து சமீபத்தில் இந்த ‘Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது. அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து நயன்தாரா- தனுஷ் விவகாரம் குறித்த செய்தி தான் பேசும் பொருளாகி இருக்கிறது.

நயன்தாராவின் ஆவணப்படம்:

இந்த நிலையில் நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியிருந்தது.
இதில் நடிகை நயன்தாரா அவர்கள் சினிமாவில் இருந்து சில காலம் ஏன் விலகி இருந்தார்?அவருடைய காதல் வாழ்க்கை,சினிமா பயணம் குறித்து பல விஷயங்கள் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆவணப்படத்தில் இயக்குனர் அட்லி, விஷ்ணுவர்தன், நெல்சன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்களின் பேட்டிகளும் இருக்கிறது. தற்போது நயன்தாராவின் ஆவணப்பட வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நயன்தாரா அறிக்கை:

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், நமது nayanthara: ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய என்னுடைய திரை பயணத்தில் நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றி அமையாதது. அதனால் அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என உங்களை அனுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லாத சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பு என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன். மேலும், ஷாருக்கான், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், சுபாஸ்கரன்,ஐசரி கே.கணேஷ், கல்பாத்தி எஸ்.அகோரம், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி ஸ்டாலின், சிரஞ்சீவி, ஏ ஆர் முருகதாஸ் உட்பட தான் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், அதில் நடிகர் தனுஷ் பெயரை மற்றும் குறிப்பிடவில்லை.

behindtalkies AMP · Quick view
View full