யார்க்கர் கிங் நடராஜனை பாராட்டிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. காரணம் இது தான்.

By Rajkumar · 12/11/2020

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜனுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இவர் முதலில் சினிமா திரை உலகில் கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இப்போது கதைக் களத்திற்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

https://twitter.com/NayantharaU/status/1326101757101895684

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் முக்குத்தி அம்மன் படத்தில் நடித்து இருக்கிறார். ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் கூட வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனை படு மும்மரமாக செய்து வருகிறார்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா. இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றியுடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடராஜன், “’மூக்குத்தி அம்மன்’ தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. நான் இந்த படத்திற்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன். நான் மட்டுமன்றி என்னுடைய குடும்பமும் என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜியின் கமெண்டிரிக்கு எங்கள் ஊர் மக்கள் ரசிகர்களாகிவிட்டனர். அவருடைய வர்ணனை மிக நன்றாக இருந்தது. எனவே அந்தப் படத்திற்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.மூக்குத்தி அம்மன் படத்தை விளம்பரம் செய்த நடராஜனை நயன்தாரா பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, உங்களது பயணத்துக்கு வாழ்த்துகள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்களும் உங்களது குடும்பமும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தைக் காண ஆவலாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full