இத்தன மணிக்கு தான் செட்டுக்கு வருவேன், இத்தனை கிலோ மீட்டர் தாண்டி ஷூட் இருக்க கூடாது - இதெல்லாம் நயன்தாராவின் புது கண்டிஷனாம்
படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா போட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர் நயன்தாரா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அதோடு இவர் சமீப காலமாக தொழிலதிபராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இப்படி நயன்தாரா நடிப்பு, பிசினஸ், குடும்பம் என்று பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் நடிப்பதற்கு நயன்தாரா கடுமையான நிபந்தனைகள் போட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, திருமணம் செய்து கொண்டாலே நடிகைகளுக்கு பெரிதாக மார்க்கெட் இருக்காது. சம்பளம் குறைந்துவிடும். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா பெரிய ஸ்டார்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நயன் போட்ட நிபந்தனைகள்:
சொல்லப்போனால், முன்பு இருந்ததை விட தற்போது தான் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. இவர் சம்பளமும் 11 கோடி வாங்குகிறார். இருந்தாலும், சமீப காலமாகவே இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலுமே நயன்தாராவிற்கு மார்க்கெட் குறையவில்லை. மேலும், இவர் தன்னுடைய வீட்டிலிருந்து 20 கி மீ தொலைவில் இருக்கும் இடங்களில் நடக்கும் படப்பிடிப்பில் மட்டுமே கலந்து கொள்வாராம்.
நயன் குடும்பம்:
அப்படியே நடத்தினாலும் காலை 11:00 மணிக்கு தான் செட்டுக்கு வருவேன் என்றும், வெளிநாடு படப்பிடிப்பில் இருந்தால் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருவேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார். இவ்வளவு நிபந்தனை போட்டும் இவர் சம்பளத்தையும் அதிகமாக கேட்கிறார் என்று பிரபல யூடியூப்பர் கூறியிருக்கிறார். இதனிடையே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நயன் திரைப்பயணம்:
திருமணத்திற்கு பிறகும் நயன் அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். கடைசியாக நயன் நடித்த அன்னபூரணி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது முதல் பாலிவுட் எண்ட்ரியாக அமைந்து இருந்த ‘ஜவான்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது.
நயன் நடிக்கும் படங்கள்:
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான படத்தில் சாகேப் விருதும் வழங்கப்பட்டு இருந்தது. ஜவான் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து நயனுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இவர் மண்ணாங்கட்டி, நயன் 81 படம், டெஸ்ட், பாலிவுட்டில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.