கொலையுதிர் காலம் திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் பரபரப்பையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை நயன்தாரா தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தனது பிரஸ் ரிலீஸ் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது “பொதுவாக நான் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடுவதில்லை, என்னுடைய வேலையே அதற்கு பதில் சொல்லும். இருப்பினும் தற்போது இதை வெளியிடும் நிர்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளேன்” என அரம்பித்த அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின், ராதா ரவி மீதான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகரான ராதாரவிஇளம் நடிகர்களுக்கு ஒரு தவறான முன்னதாரணம் எனவும் ராதாரவி போன்ற ஆட்காளால் தான் பெண்களுக்கு பல பிரச்சனை உருவாகிறது எனவும் குறிப்பிட்டுளார்.

Advertisement

வெறும் விளம்பரத்திற்காக ராதா ரவி இதுபோல பேசுவதாகவும் அதை கேட்டு சில பார்வையாளர்கள் கை தட்டியதை கண்டு தான் வேதனை அடைந்ததாகவும் கூறிஉள்ளார்.

Advertisement

அத்துடன் நடிகர் சங்கத்திற்கு ஒரு வேண்டுதலையும் வைத்துள்ளார். அதாவது உச்சநீதிமன்ற வேண்டுதலின் படி, பெண்களுக்கு எதிரான புகார்களை ஆயுவு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

Advertisement