மீண்டும் தனி விமானத்தில் வந்து இறங்கிய நயன் - அதுகூட பரவா இல்ல. இறங்கியதும் விமானத்துக்கு அருகில் இப்படி ஒரு வசதி.

By Rajkumar · 22/9/2020

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

https://www.instagram.com/p/CFbmvAvBOBR/

மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை. இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர்.

சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடட தனது காதலருடன் தனி விமானத்தில் சென்று இருந்தார் நயன். சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவாவிற்கு சுற்றுல்லா சென்று இருந்தனர்.

மேலும், அங்கே விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார் நயன்தாரா. இப்படி ஒரு நிலையில் கோவாவில் இருந்து மீண்டும் சென்னை திரும்பியுள்ள நயன் மற்றும் விக்கி மறுபடியும் தனி விமானத்தில் வந்துள்ளனர். அதுவும் விமானத்தை விட்டு இறங்கிய சில அடியில் நயன் மற்றும் விக்னேஷ் சிவனை பிக்கப் செய்ய காரும் இருந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full