பிரபுதேவாவின் 50வது பிறந்தநாளில் முதன் முறையாக மகன்களின் முகத்தை காட்டிய நயன் - எதிர்ச்சியா நடந்து இருக்குமோ ?

By Rajkumar · 3/4/2023

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2.

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

வாடகை தாய் மூலம் குழந்தை :

சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள்.அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.

சர்ச்சையில் இருந்து தப்பித்த நயன் :

இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள்.

மகன்களின் பெயரை அறிவித்த நயன் :

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதுவரை தங்கள் குழந்தைகளின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்கள் மகனின் முகத்தை முதன்முறையாக காட்டி இருக்கும் விக்னேஷ் சிவன், அந்த பதிவில் 'எங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளோம். N என்பது இந்த உலகத்தில் மிகச் சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும். என் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் ' என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பொதுவாக பிள்ளைகளுக்கு தந்தை பெயரை தானே இனிஷியலாக வைப்பார்கள் என்று விமர்சித்து வருகின்றனர். அதே போல வித்யாசமாக இருக்கும் மகன்களை பெயர்களை கண்டு என்ன இது விஜய் ஆண்டனி பாடல் வரி போல இருக்கிறது என்று கேலி செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலரும் நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா குரியன், விக்னேஷ் சிவனின் செல்லப்பெயர் விக்கி.

அதனால் தான் daianaவில் முதல் மூன்று எழுத்து dei வும் விக்கியின் இரண்டு எழுத்து vik ஐயும் குறிப்பிட்டு 'deivik' என்று வைத்திருபதாக கூறி வருகின்றனர். அதே போல சிவனின் இன்னொரு பெயர் ரத்ரன், அதனை குறிப்பிட்டே ருத்ரோனில் என்று பெயர் வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக இன்று நயன்தாராவின் முன்னாள் காதாரண பிரபுதேவாவின் முன்னாள் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full