'லேடி சூப்பர் ஸ்டார்'ன்னு கூப்பிட வேண்டாம் - திடீரென நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

By subhashini · 5/3/2025

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று நடிகை நயன்தாரா வெளியிட்டிருக்கும் திடீர் அறிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா அறிக்கை:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கை எப்போதுமே ஒரு சிறந்த புத்தகமாகவே இருக்கிறது. உங்களுடைய நிச்சயமற்ற அன்பும் ஆதரவும் தான் அதற்கு அழகு சேர்த்திருக்கிறது. என்னுடைய வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கஷ்டமான நேரங்களிலும் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் பலரும் என்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்து இருக்கிறீர்கள்.

View this post on Instagram

A post shared by JayaPlusChannel (@jayaplusnews)

நயன் வைத்த கோரிக்கை:

உங்கள் பேர் ஆதரவால் தான் இந்த பெயர் எனக்கு வந்தது. இந்த பட்டத்திற்கு நான் ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம் என் பெயர்தான் எனக்கு ரொம்ப நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தனி நபராகவும் பட்டங்களும், விருதுகளும் மதிப்பு மிக்கவைதான். ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையில் இருந்து நம் கலை தொழிலில் இருந்து உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக்கூடும் என்று கூறி இருக்கிறார்.

நயன் திருமணம்:

இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் நயன்-விக்னேஷ் சிவன் இருவரும் பிசியாக இருக்கிறார்கள். அதோடு நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

நயன் பிசினஸ்:

இவர் முதலில் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் சேர்ந்து துவங்கினார். இதை அடுத்து 9ஸ்கின் என்ற சரும பாராமரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார். இது சருமத்திற்கான கிரீம், சீரம், ஆயில் போன்ற பொருட்களை வழங்குகிறது. இதனை அடுத்து ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இதை அடுத்து சமீபத்தில் நயன்-விக்னேஷ் சிவன் இருவரும் டிக்கெட் 9 என்ற ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full