தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் அறம். இப்படத்தினை கோபி இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க தனி ஆளாக நின்று பேசுகிறார் நயன். படத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக வரும் நயன்தரா, அம்மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஏற்ப்படும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க படம் முழுக்க பிசியாக அதிரடியாக நடித்துள்ளார் நயன்தாரா.

படத்தின் திரைக்கதையை போரடிக்காத அளவிற்கு படக்கதையை நகர்த்தி இருக்கிறார் கோபி, மேலும் படம் கமர்சியலாக ஹிட் ஆவதற்கு ஏற்ற பல அற்புதமான டைலாக்குகளும் அதிரடி காட்சிகளும் உள்ளன. படம் மக்களிடமும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement


நயன்தாரா இதற்கு முன்னர் தனி ஹீரோயினாக நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் இந்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை என்பது நிதர்சனமான ஒன்று. இந்த படத்திற்கு வந்த வரவேற்பினை பார்த்த நயன் பூரித்து போய் அறம் படம் ஓடும் சென்னையின் உதயம் மற்றும் கமலா தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் வரவேற்பை பார்த்து பூரித்துப் போயிருக்கிறார்.

Advertisement

அதே போல், கமலா தியேடர்ருக்கு சென்று திரும்பும் வழியில் உள்ள லட்சுமனன் சிக்னல் அருகில் நயன்தராவின் கார் நின்றிருந்தது. அங்கு சாலையோரம் பொருட்கள் விற்கும் சிறுவர்கள் பார்த்துள்ளர். அவர்கள் பார்த்ததும் இது நயன்தாரா தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர். உடனே எழுந்து ஓடி வந்து சிக்னல் முடியும் முன்னர் நயன்தாராவிடம் செல்ஃபி எடுக்க கேட்டுள்ளனர். உடனடியாக தனது காரி கண்ணாடியை கீழ் இறக்கி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் ஜாலியான சிறுவர்கள் மகிழ்ச்சியில் ஓடி துள்ளிக் குதித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், எப்போதும் தனது மனிதத்தை குறைத்துக்கொள்வதில்லை நயன்தாரா என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Advertisement

தகவல், நன்றி : JSK கோபி

Advertisement