மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை : கேரவனில் ரெஜினாவை மிரட்டினாரா நயன்தாரா? பிரபலம் சொன்ன தகவல்

By subhashini · 22/3/2025

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் ரெஜினாவை நயன்தாரா மிரட்டி இருந்ததாக பிரபலம் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிரபலம் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் மீனாவை நயன்தாரா அவமரியாதை செய்திருக்கிறார் என்றும், அங்கு இருப்பவர்கள் உடன் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை நயன் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ரெஜினாவை நயன் மிரட்டி இருப்பதாக பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் அளித்த பேட்டியில், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மீனா, ரெஜினா இருவருமே நடிக்கிறார்கள். மீனா நிறைய சாமி படங்களில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

https://www.youtube.com/watch?v=MNgCVH4j2zQ

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை:

மூக்குத்தி அம்மன் 2 படத்தினுடைய பூஜையில் கலந்து கொள்வதற்காக தனி கேரவன் வேண்டுமென்று நயன்தாரா சொல்லி இருக்கிறார். அதை தயாரிப்பு நிறுவனமும் ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு இந்த படத்தின் பூஜையிலும் தனக்கு தான் முதல் மரியாதை கொடுப்பார்கள் நயன்தாரா நினைத்திருந்தார். ஆனால், அங்கு மீனா, குஷ்பூ, ரெஜினா ஆகிய எல்லா நடிகைகளுக்குமே பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி இருந்தது நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நயன் செய்த வேலை:

அதுமட்டுமில்லாமல் நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தார். இருந்தாலுமே, அவர் கண்டு கொள்ளவே இல்லை. நிகழ்ச்சி முடியும் நேரத்தில் தன்னுடைய செல்போனில் நயன்தாராவுடன் ரெஜினா செல்ஃபி எடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் கேரவனுக்கு வந்த நயன்தாரா, ரெஜினாவிற்கு ஃபோன் செய்து என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீ போட்டோ எடுப்பாய் என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

விமர்சிக்கும் ரசிகர்கள்:

இப்படி மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் ஒருவரை விடாமல் நயன்தாரா நோஸ்கட் செய்திருக்கிறார்.
எந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்களோ அதே அளவுக்கு தற்போது திட்டியும் வருகிறார்கள். நயனுக்கு நாட்கள் செல்ல செல்ல தலைகணம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என யாரையும் பார்க்காமல் நயன் அவமரியாதையாக நடத்துகிறார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full