என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான் - திருமண நாளில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் போட்ட பதிவு

By subhashini · 9/6/2025

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் கடைசியாக மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் டெஸ்ட். YNOT ஸ்டுடியோ தான் இந்த படத்தை தயாரித்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் மட்டும் விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறது. இந்த படங்களை எல்லாம் தயாரித்த சசிகாந்த் தான் டெஸ்ட் படத்தையும் இயக்கியிருக்கிறார். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நயன் திரைப்பயணம்:

இந்த படத்தில் மாதவன்-சித்தார்த் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தற்போது நயன் அவர்கள் சீரஞ்சீவியின் 157வது படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அதோடு நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

நயன்தரா குடும்பம்:

இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகை தாய் மூலம் தான் இந்த குழந்தையை பெற்று எடுத்து இருந்தார்கள். குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்.

திருமண நாள் கொண்டாட்டம்:

சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தது அனைவரும் அறிந்தது. இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் தங்களுடைய மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இந்நிலையில் தன்னுடைய திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாரா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

நயன் பதிவு:

அதில் அவர், எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான். நாம் இருவரில் இருந்து நான்கு பேராக இருக்கிறோம், வேறு என்ன வேண்டும். காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் காட்டினீர்கள்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாட்னர். உன்னை, எப்போதும் & என்றென்றும் நேசிக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full