நீண்ட இடைவேளைக்கு பின்னர் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்த நயன்.! யார் தெரியுமா.!

By Rajkumar · 4/3/2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதா பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படி இவர் நடித்த அறம் ,மாயா, கோலமாவு கோகிலா போன்ற பல்வேறு படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை ஈட்டி தந்தது. இது ஒருபுறமிருக்க பல முன்னணி நடிகர்களுடனும் கை கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் நடித்த இவர் த,ற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 63 'திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் இவர்தான் கதாநாயகி என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கின் இளம் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி வருகிறது. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் விஜய் தேவர் கொண்டா. அதன்பின்னர் 'நோட்டா' என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நாளிதழில் வெளியான தகவலின்படி நடிகை நயன்தாரா விஜய் தேவர் கொண்டவுடன் ஒரு காதல் கதையில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full